வானில் கூடிய புத்தம் புது நட்சத்திரங்கள்...
காலம் கரைந்து கலையும் நேரமிது....
விடைபெறும் நேரம் கண்ணீர் மழையாய்...
கரையை தேடி ஓடும் அலையாய்...
வானம் விட்டு செல்கிறோம்....
நினைவு மேகங்கள் துணைக்கு வருமோ...?
தனித்த உயிருக்கு சுகத்தை தருமோ...?
மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வருமோ...?
ஒன்றாய் சிரிக்க காலம் வருமோ...?
வானம் விட்டு செல்கிறோம்....
நான்கு உயிர்களும் கலக்கும் இடமோ...?
சுகங்கள், சுமைகளை பகிரும் இடமோ...?
பிரியும் நேரம் மனங்கள் கனமாய்...
பிரிந்த பின்பு நாட்கள் ரணமாய்...
வானம் விட்டு செல்கிறோம்....
சிரித்து மகிழ்ந்த கணங்கள் அதிகம்...
முறைத்து திரும்பிய கணங்கள் கடினம்...
எல்லாம் நிறைந்து வணக்கம் சொல்லும்...
உலகை அறிய காலம் தள்ளும்...
வானம் விட்டு செல்கிறோம்....
உரிமையெடுத்து உறவை ரசித்தோம்...
உரிமை கொடுத்து உறவை வளர்த்தோம்...
எங்கும காலடி சேர்ந்தே பதித்தோம்...
கேலி கிண்டலென சேர்ந்தே குதித்தோம்...
இந்த இனிமைகள் முடியுதே......................
---Karthik-------
No comments:
Post a Comment