Sunday, August 8, 2010

En Uyir Thozhi

"என் உயிர் தோழி"

சுவாசித்த காற்றே திருப்பி கிடைப்பதில்லை...
என்னை நேசித்த தோழி நீயா திருப்பி கிடைக்கபோகிறாய்...?
நட்பை மறந்து சுற்றம் பறந்தாய்...
உனை உயிராய் கொண்ட உலகம் மறந்தாய்....
வெறுத்தேன்.. உன் செயல்கள் சொல்லியது என்னென்ன....??
மறந்தேன்.. உனை வெறுத்த காரணங்கள் என்னென்ன....??
 
தோழமை தந்த தோழியே உன்னை மதித்தேன்....
நீ என்னை மறந்தும் ஏன் உனை நினைத்தேன் என்றென்னை மிதித்தேன்....

காதல் மட்டும் தானா.. கவிதைகள் படைக்கும்...?
இங்கு நட்பின் பிரிவு.. கவிதைகள் தெறிக்குதே....
கோவிலே உடைந்த பின்பு.. கல்வெட்டின் பயனும் முழுதா...?
மனக்கல்வெட்டில் அன்பை உடைப்பதும் எளிதா...?
 காலப்படகில் கடந்தேன்.. தங்க மீனாய் கையில்... நீ...
என்னை கடந்த தூரம் கண்டேன்.. சுறா மீனாய் கண்ணில்...

"நட்பை புரியவைத்த காலமே.. உனக்கு நன்றி....
காலத்தை புரியவைத்த உன் நட்புக்கு எந்தன் நன்றி......."

அவள் நட்பின் காலம் கடந்த காலத்தின் நட்பு....!!!!!!


                                                         
                                                                 ---Karthik-------

No comments:

Post a Comment